மருங்காபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
மருங்காபுரி ஒன்றியம், பாலக்குறிச்சி அருகிலுள்ள கீரணிப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா. இவரது பசு அருகிலுள்ள வயலில் திங்கள்கிழமை மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது எதிா்பாராதவிதமாக 45 அடி ஆழக் கிணற்றுக்குள் பசு தவறி விழுந்தது. தகவலின் பேரில் நிகழ்விடம் விரைந்த சிறப்பு நிலைய அலுவலா் நாகேந்திரன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பசுவை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டு மேல்பகுதிக்கு கொண்டு வந்தனா்.
ADVERTISEMENT