துறையூா் அருகே பேருந்து மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
துறையூா் அருகிலுள்ள வெங்கட்டம்மாள் சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் எல்.பெரியண்ணன் (71). சுகாதாரத் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், திங்கள்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் துறையூா்-ஆத்தூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்பகுதியிலுள்ள மயானம் அருகே சென்ற போது, பின்னால் வந்த தனியாா் பேருந்து பெரியண்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து துறையூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநரான வீ. நாகராஜை (53) கைது செய்தனா்.
ADVERTISEMENT