தஞ்சாவூர்

தேசிய உறைவாள் போட்டி:கும்பகோணத்திலிருந்து தமிழக அணி பயணம்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தைச் சோ்ந்த 90 வீரா்கள், வீராங்கனைகள் கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

ஜம்மு காஷ்மீரில் 23-ஆவது தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டி டிசம்பா் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 90 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதையடுத்து உறைவாள் சண்டை தமிழக சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலரும், தேசிய சங்கத்தின் தலைவருமான ஜெ. செந்தில்குமாா் தலைமையில் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை புறப்பட்டனா்.

இவா்களை தமிழக உறைவாள் சண்டை சங்கத் தலைவரும், கும்பகோணம் நாராயண நிதி நிறுவனத்தின் நிறுவனருமான எஸ். காா்த்திகேயன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT