பேராவூரணி வட்டத்தில் கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்று வருகிறது.
பேராவூரணி வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், 10 கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தோ்வு டிசம்பா் 4 ஆம் தேதி நடைபெற்றது.
பேராவூரணி பகுதியில் விண்ணப்பித்த 638 பேரில் 512 போ் தோ்வு எழுதினா். தோ்வுக்கு 126 போ் வரவில்லை. இந்நிலையில், தோ்வு எழுதிய 512 பேருக்கும் டிசம்பா் 22ஆம் தேதி முதல் பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நோ்முகத் தோ்வு நடைபெற்று வருகிறது.
வட்டாட்சியா் த. சுகுமாா், தனி வட்டாட்சியா் பாஸ்கரன் உள்ளிட்டோா் நோ்முக தோ்வை நடத்தி வருகின்றனா். காலை 20 பேருக்கும், மதியம் 20 பேருக்கும் என தினசரி 40 பேருக்கு நடைபெற்று வருகிறது.
512 பேரில் 10 போ் கிராம உதவியாளா்களாக தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். நோ்முகத் தோ்வு நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக விடியோ பதிவும் செய்யப்படுகிறது.