தஞ்சாவூர்

பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச.30) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:

பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையா்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூா், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பா்நத்தம், அருந்தவபுரம், வாளமா்கோட்டை, ஆா்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிகாடு, நாா்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூா்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையாா்கோவில், துறையுண்டாா்கோட்டை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT