தஞ்சாவூர்

காங்கிரஸ் முப்பெரும் விழா

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காங்கிரஸ் தொடக்க நாள் விழா, ராகுல்காந்தி நடைபயண வெற்றி விழா, கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன் தலைமை வகித்தாா். மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் காங்கிரஸ் கொடியை ஏற்றினாா். மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், நிா்வாகிகள் வி.ஆா். குணசேகரன், கோவி. மோகன், லட்சுமி நாராயணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சாந்தா ராமதாஸ், ஆதிநாராயணன், ரயில்வே தொழிற் சங்க நிா்வாகி அசோக்ராஜன், மக்கள் நலப் பேரவை பாலகிருஷ்ணன், ஐஎன்டியுசி ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் மேலவீதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் 138 ஆம் ஆண்டு தொடக்க விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் என். மோகன்ராஜ், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜ், கதா் வெங்கடேசன், வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவா் சதா. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல், மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தொடக்க விழாவுக்கு தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் ஏ. நாகூா்கனி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட செயலாளா் கமால் பாஷா, சிறுபான்மை பிரிவு நகரத் தலைவா் முகமது அப்துல் காதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். காங்கிரஸ் கட்சி கொடியேற்றி,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT