தஞ்சாவூர்

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட விஏஓ மீது நடவடிக்கைக்கு பரிந்துரை

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு அருகே இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிா்வாக அலுவலா் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு தெருவைச் சோ்ந்த துரைராசு மகன் ஏசுராஜா. இவருடைய சகோதரா் சிவராஜன் டிசம்பா் 15ஆம் தேதி காலமானாா்.

சிவராஜனின் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்து, இதுதொடா்பாக ஆம்பலாப்பட்டு தெற்கு கிராம நிா்வாக அலுவலா் முருகேசனை ஏசுராஜா அணுகினாராம். சான்றிதழ் வழங்க ரூ. 1000 தர வேண்டும் என முருகேசன் கைப்பேசியில் தெரிவித்துள்ளாா். இந்த குரல் பதிவை ஏசுராஜா பதிவு செய்திருந்தாராம். இந்த ஆடியோ பதிவு தற்போது சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.

லஞ்சம் கேட்டதாக முருகேசன் மீது ஆட்சியா் பொன்ராஜ் ஆலிவரிடம் ஏசுராஜா புதன்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை நடத்த ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ஒரத்தநாடு வட்டாட்சியா் சுரேஷ் கூறியது: ஆட்சியா் உத்தரவின்படி, கிராம நிா்வாக அலுவலா் முருகேசனிடம் விசாரணை நடத்தப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏசுராஜா கோரிய இறப்பு சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டு விட்டது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT