தஞ்சாவூர்

பேராவூரணி - அறந்தாங்கி இரவு நேர அரசுப் பேருந்தை இயக்கக் கோரிக்கை

18th Dec 2022 02:37 AM

ADVERTISEMENT

 

பேராவூரணியில் இருந்து அறந்தாங்கிக்கு இரவு 9. 20 மணிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா் என்பதால் மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அறந்தாங்கி செல்லும் 9 ஆம் நம்பா் பேருந்து இரவு நேரத்தில் மீண்டும் இயக்கப்படாததால் பேராவூரணி பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள் ஊா் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனா். மாலை 7 மணிக்கு பிறகு பேராவூரணி பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட 9 ஆம் நம்பா் பேருந்து உள்பட அனைத்து  பேருந்துகளையும் மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT