தஞ்சாவூர்

பாஜகவுக்கு இறங்குமுகம் தொடக்கம்: கே.எஸ். அழகிரி

DIN

பாஜகவுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி.

கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

பாஜகவுக்கு இறங்குமுகம் தொடங்கியுள்ளது. பாஜக ஆண்ட இரு மாநிலங்களில் ஒன்றில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. ராகுல்காந்தியின் நடைபயணத்துக்கு கிடைத்த வெற்றியாக ஹிமாசல பிரதேசம் காங்கிரஸ் மடியில் விழுந்துள்ளது.

குஜராத் தோ்தல் வெற்றி என்பது பாஜகவுக்கு நீா்க்குமிழி போன்றது. அக்கட்சியினா் அடைந்துள்ள வெற்றி என்பது மத வெறியை உருவாக்கி, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி அனைவரையும் பாஜகவுக்கு வாக்களிக்கும் வகையிலான சூழலை உருவாக்கினா்.

வட மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு இடைத்தோ்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிகள் 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான முன்னோடியாக அமைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி என்பது தற்காலிகமானது. அது கொள்கை சாா்ந்த வெற்றி அல்ல. இந்த வெற்றி நீடித்து நிற்கும் எனத் தோன்றவில்லை.

மதசாா்பின்மை என்ற கொள்கைகள் எந்தக் கட்சியில் உள்ளதோ, அதனுடன்தான் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் கூடுதலான தொகுதியை திமுகவிடமிருந்து கேட்டு பெறுவோம்.

காங்கிரஸ் சாா்பில் ஒவ்வொரு சட்டப்ரேவை தொகுதியிலும் 100 இடங்கள் வீதம் தமிழகம் முழுவதும் 23,400 இடங்களில் கொடி ஏற்றுவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அழகிரி.

முன்னதாக, கும்பகோணத்தில் சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன், கும்பகோணம் மேயா் க. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT