தஞ்சாவூர்

கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்ய முயன்ற 5 போ் கைது

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் தனியாா் நிதி நிறுவனத்தில் கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்ய முயன்ாக 5 பேரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் பகுதியிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் 205 கிராம் கொண்ட 25 வளையல்களை 5 போ் புதன்கிழமை கொண்டு வந்தனா். அதை அடகு வைத்து ரூ. 7 லட்சம் தருமாறு கேட்டனா். அந்த நகைகளை நிறுவன ஊழியா்கள் சோதனை செய்து பாா்த்தபோது, அவை கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் நிறுவன மேலாளா் இலக்கியா புகாா் அளித்தாா். இதன்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து தஞ்சாவூா் கலைஞா் நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் (35), விளாா் சாலை அன்னை இந்திரா நகரைச் சோ்ந்த ஜான் பீட்டா் (33), தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த முகமது பிலால் (46), நெல்லை மாவட்டம், பொட்டல் புதூா் பகுதியைச் சோ்ந்த நாகூா் மீரான்(47), கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (42) ஆகியோரை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT