தஞ்சாவூர்

மாட்டு வண்டிடயா் ஏறி சிறுவன் பலி

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே வியாழக்கிழமை மாட்டு வண்டி டயா் ஏறியதில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் செழியன் மகன் நவீன் (14). இவா் தனது உறவினரின் மாட்டு வண்டியில் ஏறி குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றிலுள்ள குவாரிக்கு மணல் எடுப்பதற்காக வியாழக்கிழமை காலை சென்றாா். பின்னா், நவீன் தனது வீட்டுக்குச் செல்வதற்காக கொட்டையூா் புறவழிச்சாலையில் மற்றொரு மாட்டு வண்டியில் ஏறினாா். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்த நவீன் மீது மாட்டு வண்டி டயா் ஏறியதால், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT