தஞ்சாவூர்

மாண்டஸ் புயல் எச்சரிக்கை: மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடின

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகங்கள் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும்,  கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், சின்னமனை, பிள்ளையாா் திடல், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகா் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம், மனோரா உள்ளிட்ட 36-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து  சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும்   மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வழக்கமாக புதன்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் வியாழக்கிழமை காலை கரை திரும்பும் நேரத்தில் மீன் வியாபாரிகள், மீனவா்கள், பொதுமக்கள் என பரபரப்பாக காணப்படும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகங்கள் மக்கள் நடமாட்டமின்றி வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. மீன்பிடித் துறைமுகங்களில் விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT