தஞ்சாவூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே முத்தையாபிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள நேருஜி தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி பவானி. இவா் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், நவம்பா் மாதம் வீட்டை பூட்டிவிட்டு சென்னையிலுள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றாா்.

இந்நிலையில், இவரது வீட்டின் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதாக பவானியிடம் கைப்பேசி மூலம் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். இதையடுத்து, பவானி மற்றும் குடும்பத்தினா் வியாழக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT