தஞ்சாவூர்

பேராவூரணி பகுதி நூலகருக்கு தமிழக அரசு  விருது

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பேராவூரணி பகுதி நூலகருக்கு  தமிழக அரசின் நல் நூலகா் விருது வழங்கப்பட்டுள்ளது. பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளத்தை சோ்ந்தவா் ஸ்ரீ வெங்கட்ரமணி. குருவிக்கரம்பையில் நூலகராக பணியாற்றிய இவா், தற்போது தம்பிக்கோட்டையில்  பணியாற்றி வருகிறாா்.

இவருக்கு  தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறை சாா்பில், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய நூலகா்களுக்கான நல் நூலகா் விருதினை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். 

தமிழக அரசின் நல் நூலகா் விருது பெற்ற ஸ்ரீ வெங்கட்ரமணிக்கு, வாசகா் வட்டத் தலைவா்  செல்லப்பன் உள்ளிட்டோா் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT