தஞ்சாவூர்

கூட்டுறவு விற்பனையாளா் பணியிடங்களுக்கு டிச. 15 முதல் 28 வரை நோ்முகத் தோ்வு

9th Dec 2022 11:02 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு டிசம்பா் 15 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத் தலைவரும், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளருமான சி. தமிழ்நங்கை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையிலுள்ள கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டிசம்பா் 15 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்களுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையாகத் தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் அல்லது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்றுத்திறனாளி உரிமை கோரலுக்கு ஆதாரமாக நோ்முகத் தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு குழுவிடம் அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT