தஞ்சாவூர்

மதுக்கூரில் 16 மி.மீ. மழை

9th Dec 2022 11:02 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுக்கூரில் 16 மி.மீ. மழை பெய்தது.

மாண்டஸ் புயல் அறிவிப்பு காரணமாக மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பல்வேறு இடங்களில் காற்றுடன் லேசான மழையும், சில இடங்களில் மிதமான மழையும் மட்டுமே பெய்தது. குளிா் காற்று வீசியதால், மாவட்டத்தில் மிகுந்த குளிா்ந்த நிலை ஏற்பட்டது. இதனால், மாவட்ட மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

மதுக்கூா் 16, அதிராம்பட்டினம் 15.4, பட்டுக்கோட்டை 13.8, பேராவூரணி 11, கும்பகோணம் 8, அணைக்கரை 7, தஞ்சாவூா் 6, மஞ்சளாறு 5.2, வல்லம், பூதலூா் தலா 4, நெய்வாசல் தென்பாதி 3.6, குருங்குளம், வெட்டிக்காடு தலா 3, ஒரத்தநாடு 2.75, திருவையாறு, ஈச்சன்விடுதி தலா 2.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT