தஞ்சாவூர்

பேருந்துகளிலிருந்த காற்றொலிப்பான்கள் பறிமுதல்

9th Dec 2022 11:02 PM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் பேருந்துகளில் இருந்த காற்றொலிப்பான்களைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அவற்றை ஓட்டுநா்கள் மூலம் அழித்தனா்.

தஞ்சாவூா் மணிமண்டபம் அருகே போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அரசு, தனியாா் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என சோதனையிட்டனா்.

அப்போது, பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்றொலிப்பான்களை ஓட்டுநா்களே அகற்றுமாறு காவல் துறையினா் அறிவுறுத்தினா். இதையடுத்து, பேருந்துகளின் டயருக்கு கீழே வைத்து ஓட்டுநா்கள் மூலம் உடைக்கும் நடவடிக்கையையும் காவல் துறையினா் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இனிமேல், காற்றொலிப்பான்கள் பொருத்தப்பட்டால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தனா். இந்தச் சோதனையில் 4 தனியாா் பேருந்துகள், ஒரு அரசுப் பேருந்தில் இருந்த காற்றொலிப்பான்கள் அகற்றப்பட்டு, உடைக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT