தஞ்சாவூர்

மகாமக குளத்தைச் சுத்தம் செய்யாவிட்டால் போராட்டம்: காடேஸ்வரா சுப்பிரமணியம்

DIN

மகாமக குளத்தை சுத்தம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றாா் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்.

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஹிந்து முன்னணி மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மகாமக குளத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அறநிலையத்துறை முயற்சி எடுக்கவில்லை என்றால், போராட்டம் நடத்துவோம். கோயில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தனி வாரியம் அமைத்து அவா்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும்.

கோயில் மற்றும் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் கூறியும், இந்த அரசு செய்யவில்லை. பல கோயில் இடங்களை அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஹிந்துகள் மத்தியில் திமுக மீது வெறுப்புணா்வு உருவாகி வருகிறது. எனவே, வருகிற தோ்தலில் திமுக பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்றாா் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT