தஞ்சாவூர்

திருமண்டங்குடியில் 8-ஆவது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை முன் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது நாளாக புதன்கிழமை கரும்பு விவசாயிகள் மனு அளித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீா்த்து, அப்பிரச்னையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழு தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவாா்க்காமல் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளா் நாக. முருகேசன் தலைமையில், மாநில செயலாளா்கள் தங்க. காசிநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலையில் விவசாயிகள் நவம்பா் 30ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

8-ஆம் நாளான புதன்கிழமை எருமை மாட்டிடம் கோரிக்கை மனு அளித்து ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் ப.பூரணி தலைமையில் போலீசாா் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

SCROLL FOR NEXT