தஞ்சாவூர்

காவி உடையுடன் அம்பேத்கா் படம்:இந்து மக்கள் கட்சி நிா்வாகி கைது

7th Dec 2022 01:37 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தில் காவி உடையுடன் அம்பேத்கா் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடா்பாக இந்து மக்கள் கட்சி நிா்வாகியைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சட்ட மேதை அம்பேத்கா் நினைவு நாளையொட்டி, கும்பகோணத்தில் காவி உடை, திருநீறு அணிந்த நிலையில் அம்பேத்கரை உருவகப்படுத்தி இந்து மக்கள் கட்சியினா் சுவரொட்டிகள் ஒட்டினா்.

இதற்கு பட்டியலின அமைப்பினா் மற்றும் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்ததுடன், இவற்றை உடனடியாக அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என காவல் துறையினரிடம் கூறினா். இதையடுத்து, மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட இந்தச் சுவரொட்டிகளைக் காவல் துறையினா் கிழித்து அப்புறப்படுத்தினா்.

மேலும், கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் பட்டியலின அமைப்பினா் திரண்டு, இந்தச் சுவரொட்டிக்கு காரணமான இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தியை கைது செய்ய கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து குருமூா்த்தியை காவல் துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT