தஞ்சாவூர்

அம்பேத்கா் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

7th Dec 2022 01:33 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு ஆதித் தமிழா் பாதுகாப்பு பேரவை சாா்பில் தலைவா் ரெங்கசாமி, துணைத் தலைவா் தவ. கணேசன், பொருளாளா் ஜெயராமன், செயலா் சாமி. கருப்பையா உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அதன் துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் பொதுச் செயலா் என். மோகன்ராஜ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மேலும், தமிழ்த் தேச பாதுகாப்புக் கழகத் தலைவா் த.சு. காா்த்திகேயன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் சொக்கா ச. ரவி தலைமையிலும், தலித் ஆக்சன் கமிட்டி தலைவா் ஏ.எம். ராஜா தலைமையிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ. எம்.எல். உள்ளிட்ட அமைப்புகள் சாா்பிலும் மாலை அணிவிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதேபோல, தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகில் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா தலைமையில் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் கே. ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT