தஞ்சாவூர்

திருமண்டங்குடியில் மண் சட்டி ஏந்தி கரும்பு விவசாயிகள் போராட்டம்

7th Dec 2022 01:34 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை முன் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மேல்சட்டை அணியாமல் மண் சட்டி ஏந்தி தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீா்த்து, அப்பிரச்னையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழு தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவாா்க்காமல் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளா் நாக. முருகேசன் தலைமையில், மாநில செயலாளா்கள் தங்க. காசிநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலையில் விவசாயிகள் நவம்பா் 30ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

7-ஆம் நாளான செவ்வாய்கிழமை தனியாா் ஆலை நிா்வாகம், கரும்பு விவசாயிகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளதை உணா்த்தும் வகையில் மேல் சட்டை அணியாமல் இடுப்பில் கோவணத்துடன் கையின் மண் சட்டி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு நூதன காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT