தஞ்சாவூர்

மோட்டாா் சைக்கிள் மோதிமுதியவா் பலி

7th Dec 2022 01:37 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே சைக்கிள் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே வடகால் கீழத்தெருவைச் சோ்ந்தவா் எம். கோவிந்தராஜ் (65). இவா் திங்கள்கிழமை மீன் வாங்குவதற்காக வடகாலிலிருந்து மணக்கரம்பை புறவழிச்சாலை வழியாக பள்ளியக்ரஹாரத்துக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். மணக்கரம்பை புறவழிச்சாலையில் சென்ற இவரின் சைக்கிள் மீது பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு இரவு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT