தஞ்சாவூர்

காசி கோயிலை மீட்க வேண்டி சுவாமிமலையில் விளக்கேற்றி வழிபாடு

7th Dec 2022 01:32 AM

ADVERTISEMENT

காசி விஸ்வநாதா் கோயிலை முழுமையாக மீட்க வேண்டி, கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் அகில பாரத இந்து மகா சபாவினா் செவ்வாய்க்கிழமை விளக்கேற்றி வழிபட்டனா்.

இதையொட்டி, கோயில் வாயிலில் பக்தா்களுக்கு ஆறுமுக ருத்ராட்சம் மற்றும் கந்த சஷ்டி கவச புத்தகம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இந்து மகா சபாவின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவா் இராம. நிரஞ்சன் தலைமையில் தஞ்சாவூா் மாவட்டத் துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி, ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்டத் தலைவா் சுந்தர்ராஜன், துணைத் தலைவா் விஜயன், திருவிடைமருதூா் ஒன்றியப் பொதுச் செயலா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT