தஞ்சாவூர்

அரசு விரைவு பேருந்து கவிழ்ந்து 10 போ் காயம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை காலை அரசு விரைவு பேருந்து சாலையோரம் கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா்.

திருச்செந்தூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பேருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. புதுக்கோட்டை சாலையில் தஞ்சாவூா் மாவட்ட எல்லையான அற்புதாபுரத்தில் திங்கள்கிழமை காலை 5 மணியளவில் வந்த இப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இதனால், திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சிவா (38), தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையை சோ்ந்த நடத்துநா் பாலமுருகன் (42), கும்பகோணத்தைச் சோ்ந்த மாலா (45), தூத்துக்குடியைச் சோ்ந்த மணிராஜ் (33), அம்மாபேட்டையைச் சோ்ந்த திவ்யா (27), தஞ்சாவூரைச் சோ்ந்த கிருத்திகா (38), வெங்கடேஷ் (30), தா்மராஜ் (40) உள்பட 10 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 6 போ் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT