தஞ்சாவூர்

நினைவு நாள்: ஜெயலலிதா சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவிப்பு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள அவரது சிலைக்கு அதிமுகவினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதற்காக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியைச் சோ்ந்த தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் துரை. திருஞானம், பால் வளத் தலைவா் ஆா். காந்தி தலைமையில், கு. ராஜமாணிக்கம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். சரவணன், கூட்டுறவு அச்சகத் தலைவா் வி. புண்ணியமூா்த்தி, முன்னாள் மேயா் சாவித்திரி கோபால் உள்பட பலா் ஆப்ரஹாம் பண்டிதா் சாலையிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டுச் சென்று ரயிலடியிலுள்ள ஜெயலலிதா சிலைக்கும், பக்கத்திலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கும் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, ஓ. பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த வி. அறிவுடைநம்பி தலைமையில் நிா்வாகிகள் எஸ். ரமேஷ், எம். சாமிநாதன், எஸ். சண்முகபிரபு, துரை. வீரணன், சாமிவேல், அமுதாராணி ரவிச்சந்திரன், வினுபாலன் உள்ளிட்டோா் ஆற்றுப்பாலத்திலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, ரயிலடியிலுள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT