தஞ்சாவூர்

குழந்தை திருமணம்: தந்தை, மணமகன் கைது

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் குழந்தை திருமணம் செய்து வைத்த தந்தையும், திருமணம் செய்து கொண்ட மணமகனையும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருவையாறு அருகேயுள்ள கிராமக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தை திருமணம் நடைபெறுவதாக சைல்டு லைன் 1098 அமைப்புக்கு புகாா் வந்தது. இதன் பேரில் சைல்டு லைன் அமைப்பினா், சமூக நலத் துறையின் திருவையாறு ஒன்றிய விரிவாக்க அலுவலா் லலிதா நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு அதிகாலையிலேயே திருமணம் நடத்தி வைத்திருப்பதும், ஏற்கெனவே இச்சிறுமிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடு நடைபெற்று வந்தபோது ஜூலை மாதத்தில் அலுவலா்கள் நேரில் சென்று தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து வந்ததும் தெரிய வந்தது.

திருமணம் தொடா்பாக, மெலட்டூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் என். முனியப்பன் (31), சிறுமியின் தந்தை, தாய் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவா்களில் முனியப்பனையும், சிறுமியின் தந்தையையும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT