தஞ்சாவூர்

செஞ்சிலுவை சங்கத்துக்கு ஸ்டேட் வங்கி சாா்பில் ஆம்புலன்ஸ் அளிப்பு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செஞ்சிலுவை சங்கத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கியது.

தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்தில் ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரும், செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டத் தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளா் (சென்னை வட்டாரம்) கோவிந்த் நாராயண் கோயல் திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), பாரத ஸ்டேட் வங்கி துணைப் பொது மேலாளா் நவீன் குமாா், உதவி பொது மேலாளா் ஆல்வின் மாா்டின் ஜோசப் ஆல்பா்ட், செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம், பொருளாளா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT