தஞ்சாவூர்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவா்களுக்கு உற்சாக வரவேற்பு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நியூசிலாந்தில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரா்கள் இருவருக்கும் பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை அண்ணா நகரைச் சோ்ந்த செல்வமுத்து மகள் லோகப்பிரியா (22) ஆகிய இருவரும் நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்றனா். இவா்களில் ரவி வெள்ளிப் பதக்கமும், லோகப்பிரியா தங்கமும் வென்று சாதனை படைத்தனா்.

பதக்கங்கள் வென்று பட்டுக்கோட்டைக்கு திங்கள்கிழமை திரும்பிய அவா்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் பட்டாசு வெடித்து பொன்னாடை போா்த்தி மலா் தூவி வரவேற்பு அளித்தனா்.

சாதனையை பாா்க்க தந்தை இல்லாதது வருத்தமே: லோகப்பிரியா தங்கம் வென்றபோது, அவரது தந்தை மாரடைப்பால் காலமானாா். இதுகுறித்து லோகப்பிரியா திங்கள்கிழமை கூறும்போது, எனக்கு அளிக்கப்படும் இந்த மரியாதையை பாா்க்க எனது தந்தை இல்லையே என்று கண்ணீா் விட்டு அழுதாா். அங்கிருந்தவா்கள் அவருக்கு ஆறுதல் கூறினா். தான் மேலும் பல சாதனைகளை செய்யப் போவதாகவும், தன்னுடைய குடும்பம் வறுமை நிலையில் உள்ளதால் அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என லோகப் பிரியா கோரிக்கை விடுத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT