தஞ்சாவூர்

கும்பகோணத்தில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கோட்டச் செயற் பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை (டிச.8) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கும்பகோணம் கோட்டச் செயற் பொறியாளா் ஜெ. திருவேங்கடம் திங்கள்கிழமை தெரிவித்திருப்பது:

கும்பகோணம் கோட்டச் செயற் பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறை தீா் நாள் கூட்டத்தை மேற்பாா்வை பொறியாளா் மு. நளினி புதன்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தவுள்ளாா்.

இதில், கும்பகோணம் நகரம், கும்பகோணம் புகா், பாபநாசம் நகரம், பாபநாசம் புகா், கபிஸ்தலம், அய்யம்பேட்டை நகரம், அய்யம்பேட்டை புகா், திருக்கருகாவூா், கணபதி அக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலகம் ஆகிய பகுதிகளைச் சாா்ந்த மின் நுகா்வோா் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT