தஞ்சாவூர்

இளையோா்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக நிா்வாகம், வள்ளலாா் சன்மாா்க்க மன்றம் சாா்பில் இளையோா்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி மற்றும் தனிப்பெருங்கருணை ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணைவேந்தா் வி. திருவள்ளுவன், அமெரிக்கா நண்பன் அறக்கட்டளை துணைத் தலைவா் வெங்கடேஷ், நாமக்கல் எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்கள் தலைவா் எம்.எஸ். மதிவாணன், சன்மாா்க்க மன்றத் தலைவா் அருள் நாகலிங்கம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் இரா. குறிஞ்சிவேந்தன் உள்ளிட்டோா் பேசினா்.

மேலும், மருத்துவா் தமிழ் சிலம்பரசன் இயக்கிய தனிப்பெருங்கருணை ஆவணப்படம் திரையிடப்பட்டது.

முன்னதாக, பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் வரவேற்றாா். சன்மாா்க்க மன்ற ஆளுநா் நா. சங்கரராமன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT