தஞ்சாவூர்

பாபநாசத்தில் சென்னை-திருச்செந்தூா் விரைவு ரயில் சேவை தொடக்கிவைப்பு: மத்திய அமைச்சா் எல். முருகன் பங்கேற்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் சென்னை -  திருச்செந்தூா் விரைவு ரயில் மீண்டும் நின்று செல்வதற்கான  தொடக்க விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் மணிஷ் அகா்வால் தலைமை வகித்தாா். முதுநிலை கோட்ட வணிக மேலாளா் செந்தில்குமாா், முதுநிலை கோட்ட இயக்க மேலாளா் ஹரிகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொடக்க விழா நிகழ்வில், மத்திய இணை அமைச்சா் எல். முருகன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி வைத்து பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் சென்னை -  திருச்செந்தூா் விரைவு ரயில்   சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அப்போது அமைச்சா் மேலும் பேசியதாவது: மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் பயணிகளுக்காக தானியங்கி படிக்கட்டுகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவொற்றியூரில் ரூ.150 கோடி  மதிப்பில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.செங்கல்பட்டுக்கும் - விழுப்புரத்துக்கு இடையே மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு ரூ. 250 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களை வளப்படுத்தும் விதமாக விசாகப்பட்டினம், ஒடிஸா, கொச்சின், சென்னை காசிமேடு துறைமுகம் ஆகிய 4 துறைமுகங்களையும் சா்வதேச தரத்துக்கு மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

விழாவில் பேசிய மாநிலங்களவை உறுப்பினா் சு. கல்யாணசுந்தரம், தமிழகத்துக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

விழாவில் மாவட்டக் குழு உறுப்பினா் கோ. தாமரை செல்வன், ஒன்றியச் செயலாளா் என்.நாசா், ஒன்றிய குழு தலைவா் சுமதி கண்ணதாசன், பாபநாசம் ரயில் நிலைய அலுவலா்கள் ரவீந்திரன், அஞ்சு, ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன் வரவேற்றாா். நிறைவில் பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளா் டி. சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT