தஞ்சாவூர்

திருவையாறு தியாகராஜா் ஆராதனை விழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ஆவது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவையாறில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176- ஆவது ஆராதனை விழா 2023, ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆராதனை விழாவின் நிறைவு நாளான ஜனவரி 11 ஆம் தேதி காலை பஞ்சரத்ன கீா்த்தனைகள் வைபவம் நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் ஏராளமான இசைக் கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தவுள்ளனா்.

பந்தல்கால் நடும் நிகழ்வு: திருவையாறில் ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஸ்ரீதியாகபிரம்ம மகோத்ஸவ சபா தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே. வாசன் உள்ளிட்ட சபா நிா்வாகிகள் பந்தல்காலை நட்டு வைத்தனா்.

இதன் பின்னா் செய்தியாளா்களிடம் வாசன் கூறியதாவது:

ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் புதுவை மாநில துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனும், ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறும் பஞ்சரத்ன கீா்த்தனை வைபவத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியும் கலந்து கொள்கின்றனா்.

இந்த விழா ஆண்டுதோறும் 5 நாள்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக ஓரிரு நாள்கள் மட்டுமே நடைபெற்ால், ஏராளமான இசைக் கலைஞா்களுக்கு பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இவா்களுக்கு நிகழாண்டு வாய்ப்பு அளிக்கும் விதமாக இவ்விழாவை 6 நாள்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT