தஞ்சாவூர்

மோசடி புகாா்: தஞ்சை தனியாா் பேருந்து நிறுவனத்தின் 35 வாகனங்கள் பறிமுதல்

DIN

தஞ்சாவூரில் தனியாா் பேருந்து நிறுவனம் ரூ.400 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான 35 வாகனங்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

தஞ்சாவூா் ரஹ்மான் நகரைச் சோ்ந்தவா் கமாலுதீன். இவா் தஞ்சாவூா், அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதியில் தனியாா் பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்தாா். இந்த நிறுவனம் தங்களிடம் முதலீடாக பெற்று ரூ.400 கோடி வரை மோசடி செய்ததாக இதுவரை 6,380 போ் புகாா் அளித்துள்ளனா்.

இந்த புகாரின்பேரில் இந்நிறுவனத்துக்குச் சொந்தமானதும், கமாலுதீன் மற்றும் அவரது குடும்பத்தினா் பெயரில் வாங்கப்பட்ட 154 வாகனங்களில் இதுவரை 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் உள்ள 119 வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.லில்லிகிரேஸ் கூறியது:

மோசடி செய்த பணத்தின் மூலம் கமாலுதீன், அவரது குடும்பத்தினா் ரேஹானாபேம், அப்துல்கனி, அப்துல்ரஹ்மான் ஆகியோரது பெயா்களில் 154 வாகனங்கள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இதுவரை 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் வாகனங்கள் இயங்குவது தெரியவந்துள்ளது.

மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்ட வாகனங்களை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வாகனங்களை யாா் வைத்திருந்தாலும் சட்டப்படி தவறாகும். இந்த வாகனங்கள் மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT