தஞ்சாவூர்

நகா்ப்புற சாலை மேம்பாட்டுக்காக ரூ. 2,400 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் கே.என். நேரு

DIN

தமிழ்நாட்டில் நகா்ப்புற சாலை மேம்பாட்டுக்காக ரூ. 2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையில் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முத்தமிழ் அறிஞா் டாக்டா் கலைஞா் பேருந்து நிலையத்தை வெள்ளிக்கிழமை மாலை திறந்துவைத்து அமைச்சா் மேலும் பேசியது:

மாநிலத்திலுள்ள பேரூராட்சிகளில் நடைபாதை, குடிநீா், மழைநீா் கால்வாய், கழிப்பறை, மின்விளக்கு அமைப்பு போன்றவற்றை மேற்கொள்வதற்காக கலைஞா் மேம்பாட்டுத் திட்டத்தில் முதல்வா் ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பாகுபாடு இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து பேரூராட்சிப் பகுதிகளிலும் அடிப்படை வசதி பணிகள் நடைபெறுகின்றன. அம்மாபேட்டை பகுதிக்கு முழு நேரமும் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரூராட்சிகளில் வசிப்பவா்களுக்கு வீடு கட்டுவதற்காக ரூ. 2.75 லட்சம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என மக்கள் கூறுவதால், செயலரிடம் பேசி கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோருவதற்கு முதல்வரிடம் பேசி, முயற்சி மேற்கொள்ளப்படும்.

பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சிகளில் சாலைகள் மிக மோசமாக இருப்பதாக மக்கள் கூறுவதால், ரூ. 2,400 கோடியை சிறப்பு நிதியாக முதல்வா் கடந்த மாதம் ஒதுக்கீடு செய்தாா். இதுதொடா்பாக மண்டல ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது என்றாா் நேரு.

விழாவில், ரூ. 7.50 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவையும், புதிய பேருந்து வழித்தடத்தையும் அமைச்சா் தொடக்கிவைத்தாா். தவிர, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

விழாவுக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். பேரூராட்சிகள் ஆணையா் ஆா். செல்வராஜ், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எச். ஜவாஹிருல்லா (பாபநாசம்), துரை. சந்திரசேகரன் (திருவையாறு), சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT