தஞ்சாவூர்

திருமண்டங்குடியில் 3-ஆவது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நடத்தி வரும் தொடா் காத்திருப்பு போராட்டம் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

போராட்டத்துக்கு சங்கச் செயலாளா் நாக. முருகேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் தங்க. காசிநாதன், பி. செந்தில்குமாா், தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவா் பி. அய்யாக்கண்ணு உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு பேசினா். தொடா் காத்திருப்பு போராட்டத்தின் மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு தூக்கிட்டுக் கொள்ளும் பாவனையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், அமமுக மாநில துணை பொதுச் செயலாளா் எம்.ரெங்கசாமி உள்ளிட்டோா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரும்பு விவசாயிகளை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினா்.

தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம், முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோா் பிரச்னையிலிருந்து விடுவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கரும்பு மற்றும் லாபத்துக்கான முழுத்தொகை மற்றும் வெட்டுக்கூலி, வாகன வாடகை முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT