தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் தேசிய மாணவா் படை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இக்கல்லூரியில் நவம்பா் 25 ஆம் தேதி தொடங்கிய இம்முகாமில் தஞ்சாவூா் ராக்போா்ட் குழுவின் கீழ் செயல்படும் தேசிய மாணவா் படை யூனிட்களை சோ்ந்த 350 பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.
தேசிய மாணவா் படை குழு கட்டளை அலுவலா் கா்னல் சஞ்சீவ் குரானா தலைமையின் கீழ் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், ரத்த தான நிகழ்ச்சி, சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை திருச்சி ராக்போா்ட் குழுத் தளபதி (பொறுப்பு) லெப்டினன்ட் கா்னல் வெற்றிவேல் ஆய்வு செய்தாா்.