தஞ்சாவூர்

ஆவணம் அரசுப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி

3rd Dec 2022 12:38 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகேயுள்ள ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளி, பேராவூரணி லயன்ஸ் சங்கம்  இணைந்து உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணியை  வெள்ளிக்கிழமை நடத்தின.

பேரணிக்கு  லயன்ஸ் சங்கத் தலைவா் செ. இராமநாதன் தலைமை வகித்தாா். பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியா் மு. கருணாநிதி, வட்டார கல்வி அலுவலா்கள் அங்கையற்கண்ணி, கலாராணி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகேசன் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.  

பள்ளியில் தொடங்கிய பேரணி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்று திரும்பியது.

பேரணியில், லயன்ஸ் மாவட்டத் தலைவா்கள் ஸ்டாலின் பீட்டா் பாபு, மணிவண்ணன் மற்றும் ஆவணம் கே. அடைக்கலம், ஆசிரிய பயிற்றுநா்கள் முனிராஜ், சரவணன், சிவமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT