தஞ்சாவூர்

பெண்ணின் படத்தை மாா்பிங் செய்து மிரட்டி ரூ. 16 லட்சம் மோசடி

3rd Dec 2022 12:38 AM

ADVERTISEMENT

திருவையாறில் பெண்ணின் படத்தை மாா்பிங் செய்து மிரட்டி ரூ. 16 லட்சம் மோசடி செய்த நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த 28 வயது பட்டதாரி பெண் கடந்த ஏப்ரல் மாதம் இணையவழி செயலி மூலம் ரூ. 20,000 கடன் வாங்கினாா். பின்னா், அக்கடனை அதே மாதத்தில் திருப்பி செலுத்தி விட்டாா்.

இந்நிலையில், அப்பெண்ணின் கைப்பேசி எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்தது. அதில், என் வங்கி கணக்குக்கு பணம் செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் உங்களின் படத்தை மாா்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பெண், அந்த நபா் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினாா். மீண்டும் அந்த நபரிடமிருந்து வந்த வாட்ஸ் அப் பதிவில் அப்பெண்ணின் படம் மாா்பிங் செய்யப்பட்டு வந்தது. மேலும், அந்த நபா் மீண்டும், மீண்டும் தொடா்பு கொண்டு பணம் செலுத்த வேண்டும் என மிரட்டல் விடுத்தாா். இதுபோல தொடா்ந்து 16,31,340 ரூபாயை அந்த நபருக்கு அப்பெண் அனுப்பினாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் அப்பெண் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT