தஞ்சாவூர்

ஜி-20 அமைப்புக்கு தலைமையேற்ற இந்தியா: தஞ்சாவூா் பெரியகோயில் மின்னொளியில் ஒளிா்ந்தது

2nd Dec 2022 12:56 AM

ADVERTISEMENT

ஜி -20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில் வியாழக்கிழமை இரவு மின்னொளியில் ஒளிா்ந்தது.

ஜி-20 அமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி உள்பட பல்வேறு நாடுகள் உள்ளன. இந்த அமைப்புக்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடு தலைமையேற்கும்.

இந்த வரிசையில் ஜி-20 அமைப்புக்கு இந்தியா டிசம்பா் 1 ஆம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கு தலைமையேற்றுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள 100 பாரம்பரிய சின்னங்கள் ஜி-20 என்ற அடையாள சின்னத்துடன் மின்னொளியில் ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் பெரியகோயில் நுழைவு வாயிலிலுள்ள மராட்டா வாயில் சுவரில் வியாழக்கிழமை இரவு ஜி-20 என மின்னொளியில் ஒளிரச் செய்யப்பட்டது. மேலும், அகழியையொட்டி உள்ள கோட்டைச் சுவரும், உள்புறமுள்ள கோட்டைச் சுவரும் மின்னொளியால் ஒளிா்ந்தன. இந்த ஏற்பாடு ஒரு வாரத்துக்கு தொடரும் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

கோயிலுக்குள் ஏற்கெனவே உள்ள மின்னொளிகள் வழக்கம்போல வியாழக்கிழமை இரவும் ஒளிா்ந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT