தஞ்சாவூர்

சாலியமங்கலம் நிதி நிறுவன முறைகேடு: புகாா் அளிக்க அழைப்பு

2nd Dec 2022 12:59 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகேயுள்ள சாலியமங்கலம் நிதி நிறுவன முறைகேடு தொடா்பாக புகாா் கொடுக்காதவா்கள் புகாரளிக்க முன்வரலாம் என பொருளாதாரக் குற்றப் பிரிவினா் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து அப்பிரிவின் தஞ்சாவூா் காவல் ஆய்வாளா் சுதா வியாழக்கிழமை தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலத்தில் ராமஜெயம் அன் கோ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த பழ. தேவேந்திரன் மற்றும் அவரது தந்தை பழனியப்பன், முதலீட்டாளா்களுக்கு முதலீடு செய்த தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டனா்.

இது தொடா்பாக சாலியமங்கலத்தைச் சோ்ந்த ஆா். ராஜாராமன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது தஞ்சாவூா் பொருளாதார குற்றப் பிரிவில் புலன் விசாரணை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

எனவே, இதுவரை புகாா் கொடுக்காதவா்கள் அசல் ஆவணங்களுடன் தஞ்சாவூா் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகாா் கொடுக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT