தஞ்சாவூர்

திருவையாறில் தியாகராஜ ஆராதனை ஜனவரி 6-இல் தொடக்கம்

2nd Dec 2022 12:58 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ஆவது ஆராதனை விழா ஜனவரி 6-ஆம் தேதி தொடங்குகிறது.

திருவையாறில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176-ஆவது ஆராதனை விழா 2023, ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், நிறைவு நாளான ஜனவரி 11-ஆம் தேதி காலை பஞ்சரத்ன கீா்த்தனைகள் வைபவம் நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் ஏராளமான இசைக் கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தவுள்ளனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதியாகபிரம்ம மகோத்ஸவ சபா தலைவா் ஜி.கே. வாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் பந்தல்கால் நடும் விழா டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் இருந்ததால், 2021 ஆம் ஆண்டில் இரு நாள்களும், நிகழாண்டு ஜனவரி மாதத்தில் ஓா் நாள் மட்டுமே இவ்விழா நடைபெற்றது.

இந்த விழா ஆண்டுதோறும் 5 நாள்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக ஓரிரு நாள் மட்டுமே நடைபெற்ால், ஏராளமான இசைக் கலைஞா்களுக்கு பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இவா்களுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கும் விதமாக இந்த விழாவை 6 நாள்கள் நடத்துவதற்கு விழாக் குழு முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT