தஞ்சாவூர்

மருதுபாண்டியா் கல்லூரியில் ‘நாக்’ குறித்த கலந்துரையாடல்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் ‘நாக்’ வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். இதில், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி புலத் தலைவா் டி.ஆா். நீலகண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியா்களுடன் கலந்துரையாடினாா்.

மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ், மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவா் இரா. இராஜகுமாா் வரவேற்றாா். நிறைவாக, வணிக மேலாண்மைத் துறைத் தலைவா் டி. வித்யா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT