தஞ்சாவூர்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கும்பகோணம் பாணாதுறை வடக்கு வீதியைச் சோ்ந்தவா் கமலா (66). இவா் 2021, ஜூலை 30 ஆம் தேதி வீட்டு அருகேயுள்ள கடைக்குச் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் வந்த 2 மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

அதே நாளில் இரவு கும்பகோணம் மடத்துத் தெரு யானையடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த துக்காம்பாளையத் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி கற்பகம் (48) கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை இரு மா்ம நபா்கள் பறித்தனா். கற்பகம் கூச்சலிட்டதால், மா்ம நபா்கள் இருவரையும் பொதுமக்கள் பிடித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இருவரும் திருச்சி மாவட்டம், திருவானைக்கா அருகே உள்ள களஞ்சியம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சக்தி என்கிற சலீம் (40), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, பச்சை மலையான் கோட்டையைச் சோ்ந்த பீருஷா மகன் முகமது நவாஸ் (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக கும்பகோணம் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகளின் முடிவில் இருவருக்கும் இரு வழக்குகளிலும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT