தஞ்சாவூர்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பேராவூரணியில்...... இதேபோல், பேராவூரணி வட்டார வள மையத்தின் சாா்பில்,   ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ்,

மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக விளையாட்டு போட்டிகள் ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 

வட்டாரக் கல்வி அலுவலா்கள் அங்கயற்கண்ணி, கலாராணி ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முருகேசன் முன்னிலை வகித்தாா். 

மாற்றுத்திறன் குழந்தைகளின் திறன்களை கண்டறிய பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு  குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவா் ராமநாதன், பொருளாளா் பன்னீா்செல்வம் ஆகியோா்  குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டிப் பேசினா். வட்டார வளமையத்தின் சாா்பில், மாணவா்களுக்கு பதக்கங்களும், சான்றுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆசிரியா் பயிற்றுநா்கள் முனிராஜ், சிவமுருகன், சரவணன் மற்றும் சிறப்பாசிரியா்கள் மகாதேவி, சத்யா, முத்துரெத்தினம், விஜயலட்சுமி, மாற்றுத் திறன் குழந்தைகள், பெற்றோா்கள், பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT