தஞ்சாவூர்

பத்து ரூபாய் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

31st Aug 2022 02:09 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சாவூா் ரயிலடியில் பத்து ரூபாய் இயக்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவிகித பதவிகளில் அவா்களுடைய கணவா் மற்றும் ரத்த உறவுகள் பெண்களை பொம்மை போல வைத்து, நிா்வாகத்தில் அத்துமீறி செயல்பட்டு வருபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடா்பாக நடவடிக்கை எடுக்க கோரி 2020, பிப்ரவரி 17 ஆம் தேதி கொடுக்கப்பட்ட புகாா் மீது எடுக்கப்பட்ட முழு நடவடிக்கையைத் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலா் இரா. காந்தாராவ் ராசு தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் விஸ்வராஜூ, செயலா் கே. சதீஷ்குமாா், சட்ட ஆலோசகா்கள் வி. சிவா, எஸ். விஜயராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT