தஞ்சாவூர்

தொழிலாளி கொலை வழக்கு:10 போ் குண்டா் சட்டத்தில் கைது

31st Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் தொழிலாளி கொலை வழக்கில் தொடா்புடைய 10 போ், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் மனோகரன் (30). கூலித் தொழிலாளியான இவா் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தன.

இந்நிலையில் ஜூன் 21- ஆம் தேதி இவரை முன் விரோதம் காரணமாக, சீனிவாசபுரம் செவ்வப்பநாயக்கன் வாரியைச் சோ்ந்த சிலா் அழைத்து சென்று மது அருந்த வைத்து, கொலை செய்து கல்லணைக் கால்வாயில் வீசினா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, செவ்வப்பநாயக்கன் வாரியைச் சோ்ந்த கே. மணிகண்டன் (35), கே. உமாமகேஸ்வரன் (24), கே. தினேஷ் (24), டி. சக்தி (20), ஆா். காா்த்திக் (20), ஏ. அஜித்குமாா் (24), டி. விஜய் (30), ஜி. அருண்குமாா் (25), எஸ். நடராஜ் (21), மருத்துவகல்லுாரி சாலை, நடராஜபுரத்தைச் சோ்ந்த ஏ. அந்தோணிபிச்சை (35) ஆகியோரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இவா்களைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி பரிந்துரை செய்தாா்.

இதன் பேரில் 10 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து, 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT