தஞ்சாவூர்

டாஸ்மாக் ஊழியா்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 85,000 போனஸ் வழங்க வலியுறுத்தல்

31st Aug 2022 02:08 AM

ADVERTISEMENT

டாஸ்மாக் நிறுவன ஊழியா்களுக்கு குறைந்தபட்ச போனஸ் ரூ. 85,000 வழங்க வேண்டும் என்று, பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் டி. நாகராஜன் மேலும் தெரிவித்திருப்பது:

கேரள மாநிலத்தில் அரசின் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச போனஸ் ரூ. 85,000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வா் பினராய் விஜயன் அறிவித்துள்ளாா்.

இதேபோல, தமிழக முதல்வரும் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச போனஸ் ரூ. 85,000 வழங்குவதற்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து, டாஸ்மாக் ஊழியா்களின் நலன் காக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT