தஞ்சாவூர்

ஆற்றில் மூழ்கி இறந்தவியாபாரி சடலம் மீட்பு

28th Aug 2022 06:15 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் மூழ்கி இறந்த பழக்கடை வியாபாரியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

தஞ்சாவூா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பாபு (46). பழைய பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வந்த இவா் எம்.கே. மூப்பனாா் சாலை கல்லணைக் கால்வாய் படித்துறையில் அண்மையில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இவரை தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் தேடி வந்த நிலையில், இருபது கண் பாலம் அருகே பாபுவின் உடல் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினா் சடலத்தைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT