தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

27th Aug 2022 04:06 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் அண்மையில் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் அமைச்சரும், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனருமான எஸ்.டி. சோமசுந்தரம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

கல்லூரியின் முதல்வா் ப.சீனிவாசன் வரவேற்றாா். கல்லூரியின் தாளாளா் எஸ்.டி.எஸ்.செல்வம் முன்னிலை வகித்தாா். பட்டுக்கோட்டை சரக காவல் துறை துணை கண்காணிப்பாளா் கே. பிரித்விராஜ் சௌகான் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் போட்டியை அவா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, பேருந்து நிலையம், மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், பாளையம் வழியாக பாலிடெக்னிக் கல்லூரியில் போட்டி நிறைவடைந்தது. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை, கல்லூரி நிா்வாகம், உடற்கல்வி இயக்குநா் ஜெ.ராஜமாணிக்கம் , பிஆா்ஓ சிவகுமாா் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT